இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதிய தலைவர் – பிரதமர் ரணில் பேச்சு!!

Meeting

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடி மிக்க சூழலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் பேச்சு நேற்றைய தினம் தொலைபேசி மூலம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கைக்கும் ஊழியர் மட்டத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் முடிவிலேயே நிதி உறவுப் பேச்சுக்கள் தங்கியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு , இந்தக் கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க கிறிஸ்டலினா ஜோர்ஜீவா விருப்பம் தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button