இலங்கைசெய்திகள்

அதிபர் தேவை – மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

mullaiteevu

முல்லைத்தீவு – விசுவமடுவில் உள்ள விசுவமடு விஸ்வநாதன் ஆரம்ப பாடசாலையில் மாணவர்கள் தமது பாடசாலைக்கு அதிபரை நியமிக்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமது பாடசாலையில் ஒரு வருட காலமாகப் பாடசாலை அதிபர் இல்லாமையைச் சுட்டிக்காட்டிய மாணவர்கள், பாடசாலையில் அதிபர் இல்லாமையால் தாங்கள் பலவிதமான வகையில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையுள்ளது.

கடந்த வருடம் 376 மாணவர்கள் கற்றுவந்தநிலையில், இந்தவருடம் 299 மாணவர்களே கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் இல்லாத காரணத்தினால் பல மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்குச் சென்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு கோட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று ஒரு சிறந்த பாடசாலை என பலராலும் போற்றப்பட்ட பாடசாலை இப்படி ஒரு நிலைக்கு வந்தமையினை கண்டு பலரும் கவலையிட்டுள்ளனர். எனவே இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு ஓர் புதிய அதிபர் ஒருவரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button