இலங்கைசமீபத்திய செய்திகள்
பிச்சை எடுக்கும் நிலமைக்கு நாட்டை கொண்டு வந்துவிட்டார்கள் – ஆதிவாசிகளின் தலைவர்குற்றச்சாட்டு
“உணவு இருந்தால் தான் ஒருமனிதன் வாழமுடியும்.
உணவில்லாத நாட்டில் யார் ஆட்சி செய்தால் என்ன? நாட்டில் மக்கள் உயிர் வாழவேண்டும். பசியால் வாடும் மக்களுக்கு அரசியலமைப்பு பற்றி புரியபோவதில்லை.”
இவ்வாறு ஆதிகுடிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உலக நாடுகளுக்கு உணவளித்த எமது நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளமை எமது தேசத்தலைவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு.
எமது நாடு இந்நிலமைக்கு சென்றமைக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவது என்று தான் தற்போதும் சிந்திக்கின்றார்கள்.
இந்நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்” என்றார்.