இந்தியாசெய்திகள்

10 வயதுச் சிறுமி எவரெஸ்ட்டில் ஏறி சாதனை!!

Rhythm Mamania

இந்தியச் சிறுமி ஒருவர் எவரெஸ்ட் ஸ்பேஸ் காம்ப் வரை மலையேற்றத்தில் ஈடுபட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் வசித்துவரும்சிறுமி ரிதம் மமானியா தனது சிறு வயதில் இருந்தே பெற்றோர்களுடன் இணைந்து மலையேறுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

மேலும் துத்சாகர், சஹ்யாத்கி போன்ற மலைத் தொடர்களில் சிறுசிறு மலையேற்றங்களில் ஈடுபட்ட ரிதம் தற்போது முதல் முறையாக எவரெஸ்ட் ஸ்பேஸ் காம்ப் வரை மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக 11 நாட்களாகக் கடும் பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, செங்குத்தான மலைப்பாதை போன்ற வழிகளில் பயணித்த ரிதம் கடந்த மே 6 ஆம் தேதி எவரெஸ்ட் ஸ்பேஸ் காம்ப்பை அடைந்ததாகக் கூறப்படுகிறது.

5 வயதிலேயே மலைகளை அளப்பதில் ரிதம் ஆர்வம் காட்டியதாக அவருடைய பெற்றோர் ஹர்ஷல் மற்றும் ஊர்சி கூறுகின்றனர்.

இயைதடுத்து இளம் இந்திய மலையேற்ற வீராங்கனை எனும் பட்டியலில் இணைந்துள்ள ரிதம் மமானியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button