இலங்கைசெய்திகள்

வடமராட்சியில் செல் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் 35 வது நினைவேந்தல்!!

alvaai

வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலானது அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலமையில் நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

கடந்த 1987ம் ஆண்டு 05ம் மாதம் 29ம் திகதி அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் operation liparation இராணுவ நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்து தங்கியிருந்தவர்கள் மீதே அரச விமான குண்டுதாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல் நடைபெற்றது. இதன்போது 18 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

முதல் நிகழ்வாக பொது சுடர் ஏற்றப்பட்டு பின்னர் மலர் அஞ்சலி, அகவணக்கம் என்பன இடம்பெற்றன.

Related Articles

Leave a Reply

Back to top button