கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்.
17,077 மெற்றிக் டன் டீசல், 1,072 மெற்றிக் டன் சுப்பர் டீசல் மற்றும் 37,391 மெற்றிக் டன் 92 ரக ஒக்டேன் பெற்றோல், 6,142 மெற்றிக் டன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 2,437 மெற்றிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படுவதாகவும் நாளைய தினம், டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.