யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு செவிப்பறைப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனுக்கே இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.