வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தென்னிலங்கையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நினைவைந்தல் நிகழ்வு இன்று (18) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காலிமுகத்திடலில் உள்ள கோட்டா கோ கம பகுதியிலேயே இவ் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில், இனவேறுபாடுன்றி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர். அத்துடன் சமயகுருமார்கள், மற்றும் பெளத்து பிக்குகளும் கலந்துகொண்டனர்.
தற்சமயம் நினைவேந்தல் உரைகள் இடம்பெற்று வருவதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைக்கப்படவுள்ளது.