முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளான மே -18 இன்று முள்ளிவாய்க்கால் மண் சோகமயமாக காட்சியளிக்கின்றது.
இறுதியுத்ததில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் மண்ணில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஏராளமான உறவுகள் குழுமி உள்ளனர்.
இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல அடக்கு முறைகளைத் தாண்டியும் இவ்வருடம் முள்ளிவாய்க்காலுக்கு படை எடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் முற்றம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலரிங்கப்பட்டு, நினைவேந்தல் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கண்ணீரால் நனைகின்றது.