எரிபொருள் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் தொடர்பில் முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அரச செலவீனங்களைக் குறைக்கும் நோக்கில் அரச அலுவலகங்களுக்கான ஊழியர்களை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிடம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன் சந்திர இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தூர இடங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அருகிலேயே பணிபுரிவதற்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தேவைக்கு ஏற்ப அலுவலர்களை அழைப்பது தொடர்பில் நிறுவனத் தலைவர்கள் முடிவுகளை எடுப்பதற்கு அனுமதிப்பது தொடர்பிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.