இலங்கைசெய்திகள்

மீளவும் சத்தமின்றி ஊர்காவற்துறையில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க முயற்சி

நாளை 10/05/2022 அன்று காலை ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கு (J /54 ) கிராமசேவகர் பிரிவில் பொதுமக்களுக்கு சொந்தமான 0.4047 கெக்ரேயர் அளவுள்ள காணிகள் சிறீலங்கா கடற்படையினரின் தேவைக்காக நில அளவை திணைக்களத்தினரால் பலாத்காரமாக அளவீடு செய்யப்படவுள்ளன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதே காணியை அளவீடு செய்து சுவீகரிக்க முற்பட்டபோதிலும் பெருந்திரளான மக்கள் அங்கு ஒன்றுகூடியதால் நிலவை அளவை திணைக்களத்தினர் அம்முயற்சியை தற்காலிகமாக கைவிட்டிருந்தனர் .

இந்நிலையில் இக்காணியை அபகரிப்பதற்காக இரண்டு வாரங்களுக்குள் மீளவும் நாளைய தினம் அளவீடு செய்யப்பட்டவுள்ளது . ஆனாலும் இதுகுறித்த அறிவித்தல் எதுவும் குறித்த கிராமசேவகர் பிரிவு அலுவலகத்தில் இதுவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லையென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது .

இதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தீவகம் சிவில் சமூகம் ( islands civil society ) அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button