உக்ரைனில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக சுமார் 1,000 பொதுமக்கள் நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் தங்குமிடங்களின் பரந்த வலையமைப்பில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் இரும்புத் தொழிற்சாலையிலிருந்து சுமார் 100 பேர் இன்று திங்கட்கிழமை சபோரிஜியா நகருக்கு வரவுள்ளதாகவும் உக்ரைனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.