ரஷ்யாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய உக்ரைன் விமானியான ஸ்டீபன் தாராபல்கா போரில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து ஐந்துக்கு மேற்பட்ட ரஷ்ய விமானங்களை வீழ்த்தியதற்காக சிறந்த விமானி என்கிற பட்டத்தையும், கீவின் ஆவி என்கிற பட்டப்பெயரையும் இவர் பெற்றுள்ளார்.
மிக்-29 போர் விமானத்தில் சண்டையில் ஈடுபட்டிருந்த போது, மார்ச் 13ஆம் திகதி அவர் போரில் உயிரிழந்துள்ளதாகவும், இறக்கும் வரை ரஷ்யாவின் 40 விமானங்களை அவர் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவருடைய வீரமரணத்தைத் தொடர்ந்து, தற்போது அவரது ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளன.
இந்த விடயம் தொடர்பில் உக்ரைனிய அரசோ, அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகமோ எந்தவிதமாக கருத்துக்களையும் தெரிவிக்கைவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.