2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ஆகியோர் கலந்து கொண்ட போது
2018 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிலுனர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர், 2018 ஆம் ஆண்டு தேசிய கல்வியற் கல்லூரியின் பயிற்சியை நிறைவு செய்துள்ள 4 ஆயிரத்து 643 ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், மே 4 ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதவும் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.