நாட்டில் வற்வரி உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் பொருட்கள் சேவைகள் மீதான வற் வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வற் வரியை எட்டு வீதமாக குறைந்தமையினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் பெரும் தவறை செய்துள்ளதாக அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில் வற் வரியை 13% அல்லது 14% ஆக உயர்த்தவேண்டும் என நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்ததும் 15 வீதமாக இருந்த வற் வரியை 8 வீதமாக குறைந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயமே.