(நமது விசேட செய்தியாளர்)
இடைக்கால அரசில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைப் பிரதமராக்க அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன எம்.பிக்கள் குழு முயற்சி எடுத்துள்ளது என எதிர்க்கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடைந்து சர்வகட்சி இடைக்கால அரசு அமைந்தால் அதில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவசன்சவின் பெயரைப் பரிந்துரைக்க அரசிலிருந்து வெளியேறிய சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சுயாதீன எம்.பிக்கள் குழுவில் ஒரு பிரிவினர் விமலைப் பிரதமராக்க அனைத்து வழிகளிலும் முயன்று வருகின்றனர். எனினும், இது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்று எமக்குத் தெரியவில்லை.
ஆனால், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முதலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியினரும் சுயாதீன எம்.பிக்கள் குழுவினரும் ஓரணியில் உறுதியாக நிற்கின்றனர்” – என்றார்.