வேறு வழியில் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டி ஏற்படும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நிலைமை மிக மோசமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. மக்கள் பல இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க விரும்பவில்லை என்றால், தற்போதைய அரசாங்கத்தை வேறு வழிகளில் கவிழ்க்க வேண்டி ஏற்படும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய அரசாங்கம் கவிழும் வரை எதிர்க்கட்சிகள் ஓயாது என்றார்.