
இலங்கை தமிழரசுகட்சியின் விசேட கூட்டம் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தலைமையில், மார்டீன் வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (24) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
மே தினக் கூட்டம் மற்றும் தந்தை செல்வா நினைவேந்தல் உள்ளிட்ட விடயங்கள் இவ்விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.