யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு கற்கைநெறி இன் 2022 ம் ஆண்டுக்கான புகுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத்துறைத் தலைவர் கலாநிதி சி. சபாஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா , முன்னாள் துணை வேந்தரும் பல்கலைக்கழக மானியங்கள் உறுப்பினருமான சிரேஸ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி திருமதி . தெய்வி தபோதரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவர்களுடன் இத்துறை சார் அதிகாரிகள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், விளையாட்டு விஞ்ஞானத் துறையின் உயர் டிப்ளோமா மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக இக்கற்கைநெறி ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையிலும் விளையாட்டுத்துறைசார் பெறுபேறுகளின் அடிப்படையிலும் மாணவர்கள் இக்கற்கை நெறிக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.
தகவல் – ஜதீ