எரிபொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்றுமில்லதாவாறு அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலில் விலையை 84 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதன்படி, புதிய விலையாக ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 375 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் டீசலின் விலை 289 ரூபாவாகவும், ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 329 ரூபாவாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.