புலம்பெயர் தேசத்தில் வாழும் TTS நண்பர்கள் இணைந்து யுத்தத்தில் படுகாயம் அடைந்து, கை ஒன்று இயலாத நிலையில் உள்ளதுடன் பலதடவை சத்திர சிகிச்சை செய்யப்பட்டதால் இப்போதும் கூட எந்த பாரிய வேலையும் செய்யமுடியாதிருக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு பசுமாடு ஒன்றினை வழங்கியதோடு அதன் பராமரிப்பிற்காக கொட்டிலும் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். உணவைக் கொடுப்பதைக் காட்டிலும் அந்த உணவைத்தேட வழியை அமைத்துக் கொடுப்பது சிறந்த தருமமாகும். இணைந்த கரங்களாய் இப்பணியை ஆற்றிய அனைவருக்கும் சுயதொழில் உதவி பெற்றுக்கொண்டவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மனிதநேயம் மிக்க இச்செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். மகத்துவமான இச் சேவையைப் புரிந்த அன்பு உள்ளங்களை ஐவின்ஸ் இணையதளம் சார்பில் நாங்களும் பாராட்டுகின்றோம்.
தகவல் – பிரபா அன்பு