கைது செய்யப்பட்ட காவல்துறை சார்ஜன்ட் காலி முகத்திடல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கட்சிசாரா போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் சீருடையுடன் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக குட்டிகல காவல் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவர் குரல் கொடுத்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பின்னர் அவர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன், ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டதையடுத்து கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்றைய தினம் அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கோட்டை காவல்துறையினரால் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிவானின் உத்தரவின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவருக்காக தமது சேவைகளை இலவசமாக வழங்க 12 சட்டத்தரணிகள் அடங்கிய குழாம் முன்னிலையாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.