கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பிள், திராட்சை, தோடம்பழம், யோகட் உள்ளிட்ட மேலும் பல உணவுகளும், குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி, ஆடைகளை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட பல இலத்திரனியல் பொருட்களும் அதில் அடங்குகின்றன.