அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை ஏற்குமாறு அரசாங்கத்திடம் இருந்து வந்த அழைப்பை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மறுத்துள்ளார்.
முன்னர் இருந்த அமைச்சரவையில், நாமல் ராஜபக்ச வகித்த அமைச்சுப்பதவியை ஏற்குமாறே ஜீவன் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தாம் ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும், தமது கட்சியின் இருநாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாகவே அரசாங்கத்தில் செய்படவுள்ளதாகவும் ஜீவன் அறிவித்துள்ளார்.