இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு, மலையம் மற்றும் கொழும்பு உட்பட தமிழர்களுக்கு உதவிசெய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் மேற்குறித்த விடயத்தை தமிழக முதலைமைச்சர் தெரிவித்துள்ளார்.
இப்பொருட்கள் தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் அரிசி, தானியங்கள், மருந்து போன்றவற்றை அனுப்பி வைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழக அரசு அனுப்பும் பொருட்களை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் ஊடாக விநியோகிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.