ஒஸ்திரிய விஞ்ஞானிகள் ஒமைக்ரொன் உள்ளிட்ட சார்ஸ்-கோவ்-2 வைரஸ் வகைகளுக்கு எதிரான புதிய தடுப்பூசியினை கண்டுபித்துள்ளனர். இதனை
வியன்னா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதுள்ள நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாதவர்களுக்கும் குறித்த தடுப்பூசி பலன் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விலங்குகளுக்கும் பின்னர் மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், நோய் எதிர்ப்புச்சக்தியானது, உடல் கலங்களில் வைரசை நுழையவிடாமல் தடுக்கிறது. இதனால் தொற்று ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
போதுமான நிதி கிடைத்தால், அனுமதிக்கு தேவையான முதல் மருத்துவ பரிசோதனைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.