ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலரி மாளிகை முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பொலிஸாரால் பொதுநபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளமையால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு கடவையை உடைத்து அலரி மாளிக்கைக்குள் செல்ல முயற்சித்து வருகின்றனர். இதன்போது பொலிஸ் அதிகாரி நபர் ஒருவர் மீது தாக்கியதாக தாக்கப்பட்ட நபர் தெரிவித்தள்ளார்.
“ஏன் என்னை அடித்தீர்கள். ஏன் எனது கன்னத்தில் அறைந்தீர்கள்?’ எனவும் ‘தங்களை தாக்க வேண்டாம் எனவும் நாட்டின் திருடர்களை துரத்தவே இங்கு வந்ததாகவும் குறித்த நபர் கோபத்துடன் கேள்வி கேட்டதுடன் நிலைமை சற்று பதற்றமடைந்துள்ளது.
இதனால் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.