இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ள நிலையில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என்ற தகவல்கள் கொழும்பில் காட்டுதீ போல பரவுகின்றன.
அத்துடன் கட்டுநாயக்காவிலும் இரத்மலானையிலும் ராஜபக்சக்களை ஏற்றிக்கொண்டுபயணிப்பதற்காக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற தகவல்களும் கொழும்பில் உலாவுகின்றன.
மக்கள் பேரெழுர்ச்சி கொண்டுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்!!