நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் மொரட்டுவையில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ வில்லோரவத்தை மரக் கூட்டுத்தாபனத்திற்கு அருகாமையில் இருந்து மொரட்டுவ மாநகர சபையை நோக்கி பேரணியாக போராட்டகாரர்கள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.