எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg, தலைமையில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து 30 நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் கூட்டம் கூட்டப்படுவது இது 2-ஆவது முறையாகும். இந்நிலையில்
பிரஸ்செல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா, பின்லாந்து, ஜார்ஜியா, ஜப்பான், நியூசிலாந்து, சுவீடன், கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டுள்ளது.