தற்போது எரிபொருள் பிரச்சினையில் நாடு சிக்கி தவித்துவரும் நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று மின்சாரத்தில் இயங்க கூடிய முச்சக்கரவண்டி ஒன்றைத் வடிவமைத்துள்ளனர்.
நேற்றைய தினம் பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சி சிறப்பு கண்காட்சியில் முச்சக்கரவண்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையின் பேராசிரியர் லிலந்த சமரநாயக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த முச்சக்கர வண்டியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
தற்போதுள்ள அனைத்து முச்சக்கர லணடிகளையும் இவ்வாறு மாற்றமுடியும் எனவும் பற்றறியை மாற்றி மாற்றி சார்ஜ் செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.