நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்கள் பெருமளவில் இடம்பெற்றுவருகின்றன. அவ்வகையில் ஜே.பி.யினர் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இப்போராடட்த்தில் கருத்துதெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வக்கட்சி மாநாடு நடைபெற்றது. நாட்டு வளங்களை கொள்ளையடித்த பஸில், மத்திய வங்கியை கொள்ளையடித்த ரணில், தரகுப்பணம் வழங்கிய கப்ரால் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் என்ன பேச – கலந்துரையாட முடியும்? நாங்கள் சென்றிருந்தால், கோட்டா வீட்டுக்கு செல்லுங்கள் என்பதையே கூறியிருப்போம்.
நிர்வாகக் கட்டமைப்பில் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டை சீரழித்துவிட்டனர். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் ஊழல்கள் பற்றி கருத்துகளை வெளியிட்டுக்கொள்கின்றனர். இதுதான் எமது நாட்டு அரசியல். அவர்கள் இவர்களைப் பற்றியும், இவர்கள் அவர்களைப் பற்றியும் குறைகூறுவது வேடிக்கையாகிவிட்டது.
எனவே, ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்பது மட்டுமல்ல, புதியதொரு கலாச்சாரத்தை உருவாக்கும் பொறுப்பும் எமக்கு உள்ளது. மக்கள் சக்திமூலம் ஆட்சியை விரட்டமுடியும்.” – என்றார்.