புலமைப்பரிசில் பரீட்சை என்பது இன்று பலரும் எதிர்பார்ப்புடன் கல்வி கற்பிக்கும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், என்றுமில்லாதவாறு தென்மராட்சி வலய பாடசாலை ஒன்று சாதனை புரிந்துள்ளமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2021) வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றது. இப்பாடசாலையின் வரலாற்றிலேயே இம்முறை முதன் முதலாக அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு மாணவர்கள் பலர் சித்தியடைந்துள்ளனர். அதிகூடிய புள்ளிகள் பெற்ற மாணவன் நிதீஸ்வரன் அபிநயன் தென்மராட்சி வலயத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். 4 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துள்ள முயற்சியின் பயனாகவே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. அயராத முயற்சி வெற்றியையே தரும் என்பதற்கு இவ்விடயமும் சான்றாகின்றது.
முதல் நிலை மாணவன் நிதீஸ்வரன் அபிநயன் எமது ஐவின்ஸ்தமிழ் இணையதளம் நடத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களினது புள்ளி விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
நீ.அபிநயன் 189
சு.அஸ்வின்179
ச.உபேசஷினி151
நி.பபிதா148
ச.அட்ஷயா 146
வி.கிசானா 143
ப.அஸ்மிதா 127
பி.கிசோமியா 124
ச.மேனுஷன் 117
வி.கஜன்சிகா 114
யே.ரக்சாளினி 111
த.நிகாஸ் 110
த.நிவாஸ் 105
அ.அனோஜ்சன் 105
அ.தனுஸ்கா 103
த.ஹிரிசிகன் 100
அனைத்து மாணவர்களையும் ஐவின்ஸ் தமிழ் இணையதளம் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்றோம்.