உக்ரைனில் தனது படைகளின் வரிசையில் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் இருப்பதை ரஷ்யா முதல் முறையாக கடந்த புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
அவர்களில் பலர் போருக்குப் பயிற்சி பெறாதவர்கள் என்றும் அவர்களில் பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாகவும் ரஸ்யா தெரிவித்திருந்தது.
ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய தாய்மாரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
“தாய்மார்களே, உங்கள் பிள்ளைகளை உக்ரைன் போர்க்களத்துக்கு அனுப்பவேண்டாம்” என்று உருக்கமாக கேட்டுள்ளார். உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தமது பிந்திய காணொளி பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
“ரஷ்ய தாய்மார்களுக்கு, குறிப்பாக கட்டாயப்படுத்தப்பட்டு பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்களுக்கு இதை மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளை வெளிநாட்டுப் போருக்கு அனுப்பாதீர்கள்” என்றும் “அவர்கள் பயிற்சிகளுக்காக எங்காவது அனுப்பப்படுவார்கள் என்ற வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்” என்றும் அவர் கோரியுள்ளார்.