இலங்கைசெய்திகள்

கைதுசெய்யப்பட்டு பொலிஸாரினால் கடும் தாக்குதலுக்கு உள்ளான பிரதேசசபை உறுப்பினர் பிணையில் விடுதலை

வலி.தென்மேற்கு பிரதேசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ நேற்று பொலிஸரால் கைதுசெய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (05) மாலை இளவாலை பொலிஸரால் பிரதேச உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிரதேசசபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஒருவர் மீதும் பொலிஸார் கடுமையான தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினரின் தாயார் மற்றுமொறு சகோதரி ஆகிய இருவரும் நேற்று இரவு மல்லாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பொலிஸரால் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு சகோதரி இன்று (06) காலை நீதிமன்றத்தில் முற்படுத்தப்டட நிலையில் அவரும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதேச சபை உறுப்பினரை இன்று (06) மாலை நேரில் சென்று பார்வையிட்ட மல்லாக நீதவான் அவரையும் பிணையில் விடுவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button