முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமர்சித்தமையினாலேயே அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட “முழு நாடும் சரியான பாதையில்” என விஞ்ஞாபனம் வெளியீட்டு விழாவில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அதற்கமைய, அமைச்சரவைக் கூட்டங்களில் விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் கலந்து கொண்டால், தான் கலந்துகொள்ளப் போவதில்லை என நிதியமைச்சர் நேற்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் அமைச்சரவையை மாற்றியமைக்கவும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கவும் ஜனாதிபதி தீர்மானித்ததாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.