உலகம்செய்திகள்

பெலாரசில் பேச்சுவார்த்தை – யுக்ரைன் ஒப்புதல்!!

Ukraine

யுக்ரைன் மீது ரஷ்ய இராணுவ படைகள் 4ஆவது நாளாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.

யுக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா தெரிவித்திருந்தது.

ஆனால் இதற்கு யுக்ரைன் மறுப்பு தெரிவித்தது. அதன்பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

இதற்காக, பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷ்ய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த அழைப்பையும் யுக்ரைன் ஏற்க மறுத்தது.

பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை யுக்ரைன் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை யுக்ரைன் வீணடிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக யுக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, பெலாரசில் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button