ஸ்பெயின் நாட்டு கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓட்டை வைத்து 5,300 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு இருக்கலாம் எனும் முடிவை தொல்பொருள் ஆய்வாளர்கள் வெளியிட்டு இருப்பது கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவீன மருத்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே நாம் அறுவை சிகிச்சை முறையைக் கருதிவருகிறோம். இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மனித மண்டையோட்டுக்கு அந்தக் காலத்திலேயே காது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஆதாரமாக அந்த மண்டை ஓட்டின் இடது காதைச் சுற்றிலும் பல்வேறு ஒடுக்கங்கள் காணப்படுகின்றன.
இதனால் அந்த மண்டை ஓட்டு மனிதருக்கு காதில் வரும் அழற்சி நோயான மாஸ்டோயிடெக்டோமி இருந்திருக்கலாம். அதிலிருந்து விடுபடுவதற்கு காதைச் சுற்றிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கலாம் எனும் கருத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
இதையடுத்து 5,300 ஆண்டு பழமையான மண்டையோட்டை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் அப்போதே அறுவை சிகிச்சை முறையும் பழக்கத்தில் இருந்திருக்கிறது எனும் தகவலை வெளியிட்டு உள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை முறை குறித்த ஆராய்ச்சியில் இதுவே மிகவும் பழமையானதாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.