இலங்கைசெய்திகள்

பல மணிநேர மின்வெட்டு இன்றும் அமுலாகிறது!!

power cut

இன்றைய தினமும் சுழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button