சிறுவயதிலேயே யோகா மீது ஆர்வம் கொண்ட ரேயான்ஷ் சுரானி யோகா பயிற்சியில் தேர்ச்சி பெற்று இளம் வயதிலேயே பயிற்றுநராக ஆகியிருக்கிறார்.
மேலும் இளம் வயதிலேயே யோகா பயிற்றுநராக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் ரேயான்ஷ் சுரானி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை தேடியிருப்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் வசித்துவரும் ரேயான்ஷ் சுரானியை அவரது பெற்றோர் 4 வயதில் ஒரு யோகா நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார்களாம். அப்போதே யோகா மீது ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு அதில் சாதனையும் படைத்திருக்கிறார்.
இதையடுத்து 9 வயதில் அனைத்து கலைகளிலும் தேர்ச்சிபெற்று இளம் வயது யோகா பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரை பூர்வீகமாகக் கொண்ட ரேயான்ஷ் சுரானி யோகா என்பது உடல்நிலை மற்றும் சுவாசம் பற்றியது மட்டுமல்ல, அதைவிட அதிகம் எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.