அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர, ஆமணக்கு விதையை பயன்படுத்தி பயோடீசலை (இயற்கை எரிபொருள்) உற்பத்தி செய்துள்ளார்.
15 வருடங்களுக்கும் மேலாக இயற்கை எரிபொருட்களை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் இயற்கை டீசல் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் விளையும் இரண்டு வகையான மூலிகை செடிகளின் எண்ணெய்கள் மனிதர்களுக்கு பயன்படவில்லை. இதனால் பாரியளவு இந்த விதைகளின் வளர்ச்சி உள்ளது. ஒரு வருடத்தின் விதைகளில் இருந்து 60 சதவீத டீசல் உற்பத்தி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்ரோலிய எரிபொருட்கள் குறைந்து வருவதால், உலகம் ஏற்கனவே இயற்கை எரிபொருளின் பக்கம் திரும்பி வருவதாகவும், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக பயோடீசலைப் பயன்படுத்துவதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
தான் தயாரித்த பயோடீசலை தனது இரண்டு வாகனங்களுக்கும் பயன்படுத்துவதாகவும், எவ்வித மாற்றமும் பிரச்சனையும் இன்றி சாதாரணமாக இயங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.