நாட்டில் நாளை (21) ஒருமணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், காலை 8.30 மணி முதல் பி.ப 7.30 மணிவரையான காலப்பகுதிக்குள் நாடு பூராகவும் ஒரு மணித்தியாலய மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தெற்கு மாகாணத்தில் காலை 8.30 மணி முதல் 4.30 வரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.