ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி வணக்கத்திற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்ல தீர்மனித்துள்ளார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்னும் சில தினங்களில் வத்திகான் சென்று, பரிசுத்த பாப்பரசரை சந்திக்க உள்ளார். இதன் போது ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக சர்வதேச விசாரணைக்கு தேவையான அனுமதியை பாப்பரசரிடம் பெற்றுக்கொள்ள கர்தினால் தயாராகி வருவதாக தெரியவருகிறது.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை எனவும் இதனால், புதிய அரசாங்கம் ஒன்றிலாவது அந்த நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று கூறியிருந்தார்.
அத்துடன் அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை மறைத்து வைத்துள்ளதாகவும் பேராயர் குற்றம் சுமத்தியிருந்தார்.