பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தடைசெய்யக்கோரி நாடுபூராகவும் தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கையழுத்துப் போராட்டத்தில் பேராயரும் கையெழுத்து இட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் றஞ்சித் ஆண்டகை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக தடைசெய்யக்கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து போராட்டத்தில் இணைந்து கையெழுத்திட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணயக்கியன் பேராயரை சந்தித்து மனுவில் கையெழுத்தை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.