உலகம்செய்திகள்

ஐரோப்பாவில் நிச்சயமாக ரஷ்யா போரை விரும்பவில்லை – ஜனாதிபதி புட்டின்!!

President Putin

Russian President Vladimir Putin arrives to take part in voting at a polling station in Moscow, Russia, Wednesday, July 1, 2020. The vote on the constitutional amendments that would reset the clock on Russian President Vladimir Putin???s tenure and enable him to serve two more six-year terms is set to wrap up Wednesday. (Alexei Druzhinin, Sputnik, Kremlin Pool Photo via AP)

ஐரோப்பாவில் ரஷ்யா நிச்சயமாக, போரை விரும்பவில்லையென அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிப்பினும், தமது பாதுகாப்பு கரிசனைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் எல்லையிலிருந்து, சில துருப்புக்களை மீளப் பெற்றுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் நேற்றுத் தெரிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

எவ்வாறிருப்பினும், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கான சாத்தியம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இதனால், மனித பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு தீர்க்கமாக பதிலளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதென்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

யுக்ரைன் எல்லையில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் துருப்புக்களை ரஷ்யா குவித்துள்ளதாகவும், சில துருப்புக்ளை மீளப்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ரஷ்யா துருப்புக்களை மீளப் பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையென மேற்கு நாடுகளும் குற்றம் சுமத்தியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button