பன்னிரண்டு வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (15) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19.10.2010 கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த அரசியல் கைதி நேற்று விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொழும்பில் பணம் சேகரித்து வழங்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரவெட்டி விக்கினேஸ்வரா வீதியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே கொழும்பு நீதிமன்ற நீதவனால் நிரபராதி என தீர்ப்பளித்து விடுதலை செய்யப்பட்டார்.
அரசியல் கைதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜாராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.