இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் மழை – குளங்களின் நீர்மட்டமும் உயர்வு!!

batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக வேளாண்மை அறுவடையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தின் சிறிய மற்றும் பெரிய குளங்களின் நீர் மட்டங்களும் அதிகரிகத்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 32அடி 10அங்குலம், உறகாமம் குளத்தின் நீர்மட்டம் 14அடி 11அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 18அடி 9அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலம், அக்குளத்தில் 2அங்குல மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது, கித்துள்வெவெ குளத்தின் நீர்மட்டம் 8அடி 5அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், புணாணை அணைக்கட்டு 7அடி 9அங்குலமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் உன்னிச்சைப் பகுதியில் 39 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 50மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 116.7மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button