இதுவரையிலான 2022 ஐபிஎல் மாபெரும் ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷான் அதிகபட்சமாக 15.25 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
2022 ஐபிஎல் மாபெரும் ஏலம், பெங்களூருவில் இன்றைய தினம் ஆரம்பமானது.
அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
அத்துடன், இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 12.25 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இதற்கிடையில், இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்க 10.75 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர் பெங்களூரு அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அத்துடன், தீபக் ச்ஹார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் 14 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்டார்.
நிக்கோலஸ் பூரான் 10.75 கோடி இந்திய ரூபாவுக்கும், பெட் கமின்ஸ் 7.25 கோடி இந்திய ரூபாவுக்கும், ககிஸோ ரபாடா, பஞ்சாப் கிங்ஸ் அணியினால் 9.25 கோடி ரூபாவுக்கும், பாப் டுப்ளிஸிஸ், ரோயல் செலஞ்சர்ஸ் அணியினால் 7 கோடி ரூபாவுக்கும், டேவிட் வோர்னர் டெல்லி கெப்பிடல்ஸ் அணியினால் 6.25 கோடி ரூபாவுக்கும் வாங்கப்பட்டனர்.