வவுனியாவுக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, மக்கள் குறைகேள் சந்திப்பையும் மேற்கொண்டார்.
இன்று காலை 10 மணிக்கு வவுனியா பல்கலைக் கழகத்தின் விடுதியில் அமைந்துள்ள மைதானத்தில் விசேட ஹெலியில் வந்திறங்கிய ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன் மற்றும் ஸ்ரீலங்கா பொபதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் ஜனக நந்தகுமார ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து மைதானப் பகுதிக்கு வருகை தந்திருந்த மக்களிடம் காணிப் பிரச்சனை, விவசாயப் பிரச்சனை மற்றும் அவர்களது தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.