பல வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் வீட்டுக்காவல் முறைமையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவை நீதியமைச்சர் அலிசப்ரி ஏற்றுக் கொண்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் சிறிய குற்றங்களுக்கான சிறைத்தண்டனை என்பவற்றுக்கான தீர்வாக இந்த முறை பல வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.
இதற்கமைய சிறிய குற்றங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்படுகின்ற கைதிகளை விளக்கமறியலில் வைக்காமல் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களது வீடுகளிலேயே தடுத்து வைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்பத்தின் ஊடாக சிறைச்சாலைகள் அதிகாரிகளினால் அவர்கள் கண்காணிக்கப்படுவர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சுகாதார தேவைகள், தொழில் நடவடிக்கைகள், மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் முன்னர் அனுமதி பெற்ற செயற்பாடுகளுக்காக அவர்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.